Banner 468 x 60px

 

Monday, December 24, 2012

இலங்கையில் பலத்த மழை கிராமங்கள் நீரில் மூழ்கின!

0 comments



இலங்கையில் பலத்த மழை கிராமங்கள் நீரில் மூழ்கின!இலங்கை வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம்  அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல  கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இலங்கையில் சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது . இதன் எதிரொலியாக, தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் பல கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. பல கிராமங்களில் போக்குவரத்துகள் தடை பட்டுள்ளன.

0 comments:

Post a Comment