இம்மாதத்தில் பலரும் அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினமாக 21 ஐக் குறிப்பிடலாம்.
அதாவது இத்தினத்தில் உலகம் அழிந்துவிடப்போவதாக பலர் தங்கள் கற்பனைத் திறனில் வெவ்வேறேன கதைகளைக் கூறிய வண்ணமுள்ளனர்.
ஒரு சில ஊடகங்களும் எவ்வித சரியான மூலகமும் இன்றி உலக அழிவு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாசாவே உலக அழிவு தொடர்பில் உறுதியாக கருத்து எதனையும் வெளியிடாத போதும் நாசாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடும் ஒரு சில ஊடகங்களையும், ஏராளமான தனிநபர்களையும் சமூகவலையமைப்புகளிலும் காணமுடிகின்றது.
மாயன் நாட்காட்டி, உலகம் இருளில் மூழ்கப்போகின்றது, நிபிறு என்ற கோள் பூமியுடன் மோதி உலகத்தையே அழிக்கப் போகின்றது என்று கற்பனைத் திறனை புகுத்தி செய்திக்காக தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கின்றன ஒரு சில ஊடகங்கள். ஆனால் இவ்வாறான தகவல்களால் பலர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தங்களுக்கு பல மின்னஞ்சல்கள் கிடைப்பதாக நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையத்தின் வானுயிரியல் பிரிவின் ஆராய்ச்சியாளரான டேவிட் மொரிசன் தெரிவிக்கின்றார். பலர் தாங்கள் இத்தகைய செய்திகளால் உண்ண முடியாமலும், உறங்க முடியாமலும் தவித்து வருவதுடன் மன இறுக்கத்துக்கும் ஆளாகியுள்ளதாக மின்னஞ்சல்களில் குறிப்பிட்டுள்ளதாக டேவிட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வதந்திகளுக்கு மக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லையெனவும் மொரிசன் வலியுறுத்தியுள்ளார் .
0 comments:
Post a Comment