
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் தலைவரான அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டா தனது தவணை முடிந்ததும் பதவி விலக திட்டமிட்டுள்ளார்.
அவருக்கு பதில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுபவர் குறித்து ஜனாதிபதியால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் முன்னாள் செனட் உறுப்பினரான ஹேகலை அந்த பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதற்கு ஜனநாயக கட்சியின் பெரும்பான்மை யானோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஹேகல், இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாலேயே அவருக்கு பெரும்பாலான செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப் பதாகக் கூறப்படுகிறது. ஹேகல் வொஷிங் டனை இஸ்ரேலின் வரவேற்பறை என்று விமர்சித்து சர்ச்சையை கிளப்பியவராவார். அவர் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைக்கு எதிராக வாக்களித்துள்ளார்.
இது தொடர்பில் செனட் சபையில் உள்ள பெரும்பான்மை குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட் டுள்ளனர். புதிய பாதுகாப்புச் செயலாளரை நியமிக்க செனட் சபையின் பெரும்பான்மை ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment