Banner 468 x 60px

 

Sunday, January 6, 2013

'டைசனுடன்' கைகோர்க்கும் செம்சுங்: அண்ட்ரோய்டிடம் இருந்து விலகும் திட்டம்?

0 comments
தென்கொரிய நிறுவனமான செம்சுங், கூகுள் அண்ட்ரோய்ட் மூலம் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியதுடன் அதன் வளர்ச்சி பலமடங்காகியது.

மொபைல் போன் வரலாற்றில் இக் கூட்டணி மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.
அண்ட்ரோய்டுடன் கைகோர்த்தன் மூலம் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பாளராக மாறியது செம்சுங்.
இதுமட்டுமன்றி விண்டோஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களையும் செம்சுங் தொடர்ச்சியாக தயாரித்தது.

இந்நிலையில் 'டைசன்' எனும் இயங்குதளம் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக செம்சுங் தெரிவித்துள்ளது.
மூன்றாந்தரப்பினரின் இயங்குதளங்களில் தங்கியிருப்பதனை சற்றுக்குறைக்கும் முகமாகவே செம்சுங் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
செம்சுங் ஏற்கனவே 'Bada' என்ற தனது சொந்த இயங்குதளம் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளை தயாரித்து வந்தது. அதுவும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடைந்தது.
எனினும் இதனை விட மேம்பட்ட போட்டியளிக்கும் விதத்திலான இயங்குதளத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் செம்சுங்கிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.


ஏனெனில் அண்ட்ரோய்ட் திறந்த மூல மென்பொருள் ' open source' என்றபோதிலும் கூகுளுக்கு சொந்தமானது.
கூகுள் தற்போது மோட்டோரொல்லா நிறுவனத்தை பெருந்தொகைக்கு கொள்வனவு செய்திருப்பதனால் தனது சொந்த ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் தயாரித்து ன்பிரபலப்படுத்தும் பொருட்டு அண்ட்ரோய்ட் மீது கட்டுப்பாடுகளை எந்நேரத்திலும் கொண்டுவரலாம்.
எதிர்காலத்தில் தனக்கு போட்டியாக வரலாம் என்ற எண்ணத்தில் முற்றிலுமாக அண்ட்ரோய்ட்டை இடைநிறுத்தலாம்.
இது போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டே 'டைசன்' இயங்குதளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

செம்சுங்,இண்டெல், என்.டி.டி. டொகோமோ, வொடபோன் நிறுவனங்கள் இணைந்து 'டைசன்' இயங்குதளத்தை ஊக்குவிக்கும் அமைப்பை உருவாக்கின.
'டைசன்' இயங்குதளமும் லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே நொக்கியா, இண்டெலின் 'மீகோ', லினெக்ஸ் பவுண்டேசனின் லிமோ ஆகிய பல மொபைல் இயங்குதளங்கள் லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த வருடம் ஆரம்பத்தில் தனது 'bada' இயங்குதளத்தை இண்டெல் கோர்ப் இன் உதவியுடன் உருவாகி வரும் இயங்குதளத்துடன் இணைக்கப் போவதாக செம்சுங் அறித்தது.
இந்நிலையில் தற்பொது செம்சுங் அம் முயற்சியினை ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது.
இண்டெல் நிறுவனமும் அதன் மொபைல் சிப்களை பிரபலப்படுத்துவதற்கு காத்திருக்கும் நிலையில் செம்சுங்குடன் கூட்டணி அமைக்கும் சாத்தியமும் நிலவுகின்றது.
அண்மையில் உபுண்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே செம்சுங்கிடம் இருந்து இத்தகவலும் வெளியாகியுள்ளது.
சில விடயங்களை கருத்தில் கொள்ளும் போது கூகுளின் ஆதிக்கத்தில் இருந்து செம்சுங் விடுபட முயல்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஆனால் மில்லியன் கணக்கான டொலர்களை இலாபமாக ஈட்டித்தந்த கூட்டணியை இலகுவில் செம்சுங் விட்டுவிடுமா? என்பதும் சந்தேகத்துக்குரியதே.

0 comments:

Post a Comment