Banner 468 x 60px

 

Friday, January 4, 2013

'உபுண்டு' ஸ்மார்ட்போன்!

0 comments
தொழிநுட்ப உலகில் உபுண்டு இயங்குதளத்தை அறியாதவரில்லையெனலாம். 

மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் கணனி உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனியுரிமை நிலையை தோற்றுவித்துள்ள போதிலும் உபுண்டுவுக்கென தனியானதொரு கூட்டம் உள்ளது.
உலகம் பூராகவும் சுமார் 20 மில்லியன் பேர் உபுண்டுவை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாளுக்கு நாள் இவ் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

விண்டோஸிலிருந்து வேறுபட்ட அனுபவத்தினை தருகின்ற உபுண்டு தற்போது ஸ்மார்ட் போன்களுக்கும் வரவுள்ளது.
லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இதன் மூலம் கணனிகளுக்கான அப்ளிகேசன்களையும் ஸ்மார்ட் போன்களில் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதற்படியாக கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களில் அண்ட்ரோய்டிற்கு பதிலாக உபுண்டுவை விரைவில் உபயோகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இப்புது முயற்சி தொடர்பில் ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உபுண்டுவின் ஸ்தாபகரான மார்க் சட்டல்வேர்த் தெரிவித்துள்ளார்.
கணனிகளுக்கு ஒப்பாக ஸ்மார்ட்போன்களை செயற்பட வைத்தலே இதன் முக்கிய நோக்கம் என அதன் மார்க் சட்டல்வேர்த் தெரிவிக்கின்றார்.
ஆனால் இம்முயற்சி வெற்றுபெறுமா? என்பது சந்தேகத்துகுரியது ஏனெனில் இதே நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன குறிப்பாக மோட்டொரொல்லா ஆட்ரிக்ஸை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
ஆனால் மோட்டொரொல்லா ஆட்ரிக்ஸ் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றதாக என்பது சற்று சந்தேகத்துக்குரியது.

இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் உபுண்டுவின் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உபுண்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன் வெளியாகியுடனேயே இது பெறும் வரவேற்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும்
.

0 comments:

Post a Comment