இணைய ஜாம்பவானான கூகுள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய திட்டமொன்றில் முதலிடவுள்ளது.
இம்முதலீட்டை ஐக்கிய இராச்சியத்திலேயே மேற்கொள்ளவுள்ளது.
லண்டனில் சுமார் 10 இலட்சம் சதுர அடியில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் பணியை கூகுள் இதன் மூலம் முன்னெடுக்கவுள்ளது.

இக் கட்டிடமானது கூகுளின் ஐக்கிய இராச்சியத்துக்கான தலைமையகமாக செயற்படவுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகள் இவ்வருட இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளன.
தற்போது கூகுளின் ஐக்கிய இராச்சியத்துக்கான அலுவலகங்கள் விக்டோரியா மற்றும் ஹோல்போர்ன் பிரதேசங்களில் செயற்பட்டு வருகின்றன.
எனினும் புதிய கட்டிடத்தை நிர்மாணித்ததன் பின்னர் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்படுமென கூகுள் தெரிவிக்கின்றது.
கூகுள் போலவே மற்றைய தொழிநுட்ப நிறுவனங்களான அப்பிள், பேஸ்புக்
போன்றவையும் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment