Banner 468 x 60px

 

Monday, January 28, 2013

புதிய 10 அமைச்சர்கள், 6 பிரதி அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள் நியமனம்

0 comments

Baseer0புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று திங்கட்கிழமை (28.01.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நான்கு முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும், மூன்று போருக்கு பிரதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களது விபரம் வருமாறு:
01) சுசில் பிரேமஜயந் - சுற்றாடல் அமைச்சர்
02) சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
03) பவித்ரா வன்னியாராச்சி - மின் சக்தி அமைச்சர்
04) அனுர பிரியதர்ஷன யாப்பா - பெற்றோலிய வளத்துறை அமைச்சர்
05) லக்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை- அபிவிருத்தி அமைச்சர்
06) லக்மன் யாப்பா அபேவர்தன - நிதி திட்டமிடல் அமைச்சர்
07) ஜயரத்ன ஹேரத் - பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர்
08) துமிந்த திஸாநாயக்க - கல்வி சேவைகள் அமைச்சர்
09) காமினி விஜித் விஜித்த முனி சொய்சா - வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
10) பசீர் சேகுதாவுத் - உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர்
திட்ட அமைச்சர்கள் :
1) நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
2) ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

பிரதி அமைச்சர்கள்:
1) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி
2) எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
3) பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
4) அப்துல் காதர் - சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
5) சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
6) சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை
Baseer
Hisbullah
Faizal
Cader

0 comments:

Post a Comment