Banner 468 x 60px

 

Tuesday, January 15, 2013

அப்பிள் 4 இல் அடைந்ததை செம்சுங் 3 இல் அடைந்தது!

0 comments



செம்சுங்கின் கெலெக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போது அதிகமாக விற்பனையாகுபவையாகத் திகழ்கின்றன.
இந்நிலையில் இதுவரை தான் 100 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது.

செம்சுங் எட்டியுள்ள இம் மைல்கல்லானது ஸ்மார்ட் போன் வரலாற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது காரணம் வெறும் 3 வருடங்களில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளமையாகும்.
செம்சுங் முதன்முறையாக கெலக்ஸி எஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட் போனான SAMSUNG I9000 GALAXY S ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.

அக்காலப்பகுதியிலேயே அப்பிள் ஐபோன் 4 வினையும் வெளியிட்டது. ஐபோன் 4 விற்கு ஈடுகொடுக்கும் வகையில் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போனும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அப்பிள் காப்புரிமைக் கதைகளைக் கூறி நீதிமன்றம் வரை சென்றது வேறு கதை.
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் Samsung I9100 Galaxy S II ஸ்மார்ட் போனை செம்சுங் வெளியிட்டது.

இதுவும் சந்தையில் அதிகம் விற்பனையாகிய ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக அக்காலப்பகுதியில் திகழ்ந்தது.
இறுதியாக Samsung I9300 Galaxy S III ஸ்மார்ட் போனை கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது. Galaxy S III வும் விற்பனையில் சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகின்றது. அனைத்து கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களினது விற்பனையையும் Galaxy S III முந்தியுள்ளது.

செம்சுங்கின் கணக்கின் படி 25 மில்லியன் Galaxy S ஸ்மார்ட் போன்களையும் , 40 மில்லியன் Galaxy S II, 41 மில்லியன் Galaxy S III ஸ்மார்ட் போன்களையும் விற்பனை செய்துள்ளது.இது 100 மில்லியனுக்கு அதிகமாகும்.
இதேவேளை அப்பிள் நிறுவனமானது 100 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது.
எனினும் இவ் எண்ணிக்கையை அப்பிள் தனது ஐபோன் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி சுமார் 4 வருடங்களின் பின்னரே அடைந்தது.
அப்பிள் முதல் ஐபோனை 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதமே வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே அப்பிள் 4 வருடங்களில் எட்டிய இலக்கினை செம்சுங் 3 வருடங்களில் எட்டியுள்ளது.
மேலும் செம்சுங் கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை மாத்திரம் விற்பனை செய்வதில்லை.
மாறாக கெலக்ஸி நோட், கெலக்ஸி வை, கெலக்ஸி ஏஸ், என பல்வேறு கையடக்கத்தொலைபேசி வரிசைகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment