Banner 468 x 60px

 

Thursday, January 3, 2013

செனட் சபையில் பிரேரணை நிறைவேற்றம்; ஒபாமா மகிழ்ச்சி

0 comments


அமெரிக்காவில் இயல்பாகவே வரி உயர்வுக்கு வழிவகுக்கும் சட்டத்துக்கு எதிரான பிரேரணை வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் பிரதிநிதிகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குடியரசுக் கட்சியினரின் ஒத்துழைப்புடன் செனட் சபையில் இந்தப் பிரேரனை நிறைவேற்றப்பட்டது.
257  - 167 என்ற வாக்கு வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் பாரிய பின்னடைவிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஜனாதிபதி பரக் ஒபாமா பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணை மூலம் செல்வந்தர்களுக்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன், மத்திய தர வருமான வகுப்பினர் அதிகம் வரி செலுத்துவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா பிரேரணையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அது சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் புதிய பிரேரணை நிறைவேற்றப்படாவிடின், அமெரிக்காவில் வருமான வரி உள்ளிட்ட வரிகள் இயல்பாகவே அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இதனைத் தடுக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

0 comments:

Post a Comment