
வெனிசுவேலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் பதவிப் பிரமாணம் செய்ய முடியாமல் போனாலும் நாட்டினை ஆட்சி செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சத்தியப் பிரமாண நிகழ்வில் அவர் கலந்துகொள்ளாவிட்டாலும் அடுத்த பதவிக் காலத்தை அவர் ஆரம்பிப்பார் என உப ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய்கான சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சாவேஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபடும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு நாளில் உயர் நீதிமன்றத்தில் சாவேஸ் பதவிப் பிரமாணம் செய்ய முடியும் எனவும் மதுரோ கூறியுள்ளார்
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஹியூகோ சாவேஸ் நாட்டின் ஜனாதிபதியாக எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சாவேஸ் பதவியேற்காத பட்சத்தில் மற்றுமொரு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சில எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளதையும் நிக்கோலஸ் மதுரோ நிராகரித்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை பொதுமக்கள் முன்னர் சாவேஸ் தோன்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெனிசுவேலாவில் அரசியல் ஸ்திரமன்ற நிலைமை ஏற்படலாம் எனவும சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment