
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் 40 ஆயிரத்து 460 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து 160 பெருந்தெரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
அவற்றில் 2 ஆயிரத்து 263 பேர் மரணமாகியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 6 ஆயிரத்து 635 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதவிர, சிறு காயங்கள் காரணமாக 14 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 48 மணி நேர காலப்பகுதியினுள் திடீர் விபத்துக்கள் காரணமாக 702 பேர் கொழும்பு தேசிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பட்டாசு கொழுத்தியதன் காரணமாக எந்தவொரு விபத்துக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
0 comments:
Post a Comment