Banner 468 x 60px

 

Sunday, January 6, 2013

இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் பிரசவம்

0 comments



ஒன்றாகப் பிறந்து ஒரே நாளில் திருமணம் செய்துகொண்ட இரட்டைச் சகோதரிகளுக்கு ஒரே நாளில் பிரசவம் நடந்த சம்பவமொன்று அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

19 வயதான ஆஷ்லி நெல்சன் மற்றும் அய்மி நெல்சன் ஆகிய மேற்படி இரட்டைச் சகோதரிகள் ஒஹியோ, சுமா அன்ரன் வைத்தியசாலையில் தங்களது குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்களது குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இவ்விருவரதும் பிரசவத்துக்கு இரண்டு மணித்தியால வித்தியாசம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவர்கள் இருவருக்கும் ஒரே வைத்திய குழுவே பிரசவம் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், 'தாங்கள் இருவரும் ஒரே நாளில் குழந்தைகளை பிரசவிப்போம் என்று ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை' என்று அந்த இரட்டைச் சகோதரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment