
'கடலுக்கு கீழ் இன்றியமையாத வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் கலைஞர் ஒருவர் பிடித்துள்ள புகைப்படங்களானது பிரிட்டனில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீருக்கடியில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்பட கலைஞரான ஜோஸன் லேஸ்லி என்ற 42 வயது கலைஞரே இவ்வாறான புகைப்படங்களை பிடித்துள்ளார்.
இதற்காக அவர் கடலுக்கு அடியில் பல மணித்தியாலங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயல்பாகவே நீருக்கு அடியில் மனிதர்கள் இருப்பதை போன்று இக்கலைப்படைப்புகள் தத்தரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன.
மீன்களை வித்தியாசமாக காட்டவேண்டுமென்ற என்ற எண்ணத்தில் இவர் இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். அதனால் இவர் மனித உருக்களிலான விளையாட்டு பொம்மைகளை பெற்றுகொண்டு கடலுக்கு அடியில் சென்றுள்ளார். இதன்போது மீன்களுக்கு இடையில் அவற்றினை வைத்து வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களை பிடித்துள்ளார்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் இராணுவ வீரர்கள், சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் என வெவ்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன.
அதிகமான காட்சிகள் கடலுக்கடியில் காணப்படும் மணலில் வைத்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.





0 comments:
Post a Comment