Banner 468 x 60px

 

Monday, January 7, 2013

செம்சுங் கெலக்ஸி S IV?

0 comments
 
செம்சுங்கின் கெலக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் தொடர்ச்சியாக சந்தையில் சாதனை படைத்துள்ளன.


குறிப்பாக கெலக்ஸி எஸ் வரிசைக்கு என்றுமே நல்ல கேள்வியுள்ளது.
செம்சுங் கெலக்ஸி 3ஸ், எஸ்2, எஸ்3, என அனைத்துமே செம்சுங்கின் நன்மதிப்பை உயர்த்தின.

இதுபோல கெலக்ஸிநோட், நோட் 2 ஆகியனவும் விற்பனையில் சாதனை படைத்தன.
இந்நிலையில் செம்சுங் அடுத்து வெளியிடவுள்ளதாக நம்பப்படும் செம்சுங் கெலக்ஸி எஸ் 4 வின் படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
செம்சுங் நிறுவனத்தில் தொழில்புரியும் ஒருவர் மூலமாக இப்படம் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இதன் தொழிநுட்ப அம்சங்களாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுவன:
- Exynos 5450 Quad-Core CPU clocked at 2.0GHz
- Mali-T658 GPU
- 2GB of RAM
- 4.99” SuperAMOLED FULL HD resolution (1080×1920) Display
- 13 Megapixel Rear Facing Camera
- 2 Megapixel Front Facing Camera
- Android 4.2.1 (Out of the box)

எனினும் இத்தகவலானது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் இப் படம் உண்மையாகவே கெலக்ஸி எஸ் 4 வினுடையதா இல்லையா என.

0 comments:

Post a Comment