Banner 468 x 60px

 

Tuesday, January 1, 2013

ஈராக்கில் 'pயா அரசுக்கு எதிராக சுன்னி முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் தீவிரம்

0 comments


துணைப் பிரதமரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் மோதல்
ஈராக்கின் பெரும்பான்மை ஷியா அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் சுன்னி முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் துணைப்பிரதமரின் மெய்ப்பாதுகாவ லர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் மேற்கு மாகாணமாக அன்பாரின், ரமதின் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சுன்னி தலைவர்களுள் ஒருவரும் துணை பிரதமருமான சலாஹ் அல் முத்லக், பதற்றத்தைத் தணிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் உரையாற்ற முற்பட்டார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை வெளியேறும்படி கோஷமெழுப்பியதோடு அவரது வாகனத் தொடரணி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து துணைப் பிரதமரின் மெய்ப்பாதுகாவலர்கள் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் தம்மை கொல்ல முற்பட்டதாக துணைப் பிரதமர் சலாஹ் அல் முத்லக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈராக்கில் ஆயிரக்கணக்கான சுன்னி முஸ்லிம்கள் ஈராக்கிற்கான ஜோர்தான், சிரியா விநியோகப்பாதையை இடைமறித்து ஒருவார காலமாக பிரதமர் நூரி அல் மாலிக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஈராக் அரசு சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக மாலிகி, ஈராக்கின் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மை சுன்னி முஸ்லிம் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்கனவே எகிப்து, தூனிஷியா, யெமன் போன்ற நாடுகளில் அரசுகளை கவிழ்த்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பிரதமரை பதவி விலகுமாறு கோஷமெழுப்பி வருகின்றனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் செயற்படுவதாக ஈராக் பிரதமர் மாலிகி தனது தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார். எனவே அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும் கலைந்து செல்லுமாறு கோரியுள்ளார். “உங்களது பிரசாரத்தை எத்திவைக்க முயற்சிக்கிaர்கள். இது எமக்கு கிடைத்துவிட்டது. எனவே இப்போது கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் பெரும் சிக்கல்கள் ஏற்படும்” என்று மாலிகி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கோரினார்.
ஈராக்கின் தற்போதைய பதற்ற நிலை குறித்து அரபு லீக்கும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கடந்த 2011 இல் வெளியேறியபின் அங்கு ஷியா- சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான முறுகல் அதிகரித்தது. சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய சதாம் ஹுஸைன் அரசு கவிழ்க்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள், சுன்னி பிரிவினருக்கு எதிராக செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “எமக்கு உங்களது உணவு தேவையில்லை. உங்களது தண்ணீர், மருந்து எதுவும் தேவையில்லை. எமது கெளரவத்தை காக்க எமக்க உரிமை இருக்கிறது” என ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் ஒரு சுன்னி மதத்தலைவர் கோஷம் எழுப்பினார்.

0 comments:

Post a Comment