Banner 468 x 60px

 

Saturday, January 5, 2013

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய மலாலா யூசுவ் சாய்

0 comments

தலிபான்களின் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுவ் சாய் பிரித்தானியா வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
எவ்வாறாயினும் அவர் விசேட சிகிச்சைகளுக்காக தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் தாக்குதலுக்குள்ளான 15 வயதான மலாலா, பிரித்தானியாவின் குயின் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
தலையிலும், நெஞ்சிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவருக்கு, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதமளவில் மண்டையோட்டில் விசேட சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
மலாலா அதிக மன துணிவைக் கொண்டுள்ளமையால், மனரீதியிலும், உடல் ரீதியிலும் விரைவில் தேறி வருவதாக அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம், உள ரீதியில் அவர் மேலும் வலுவடையலாம் என வைத்தியர்கள் குழாம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பெண்கள் கல்வி தொடர்பில் குரல்கொடுத்து வந்த மலாலா யூசுவ் சாய் கடந்த வருடம் ஒக்டோபர் 9 ஆம் திகதி தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளானார்.
பாகிஸ்தானில் பலமுறை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதன்  பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் மலாலாவை நேரில் சந்தித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிவ் அலி சர்தாரி, அவரது அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment