
பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மேற்கொண்ட தீர்மானங்கள் சட்டரீதியானவை அல்லவெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு மேற்கொண்ட தீர்மானங்கள் சட்டரீதியானவை அல்லவெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அரசியல் அமைப்பின் பொருட் கோடல் தொடர்பில் உயர்நீதின்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறவித்துள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நிலையியற் கட்டளை 78-A உறுப்புரைக்கு அமைய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவிற்கு நீதவான் ஒருவருக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரமோ அல்லது சட்ட அங்கீகாரமோ இல்லை எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை என்பது ஒரு சட்டம் அல்லவெனவும் அவர் குறிப்பிடுகிறார்.
அசியல் அமைப்பின் பொருட்கோடலின் பிரகாரம் அதன் 125ஆவது உறுப்புரைக்கு அமைய தனித்துவமான ஏகோபித்த சட்ட அதிகாரங்கள் உயர்நீதிமன்றத்தின் வசமே உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதனடிப்படையில் அரசியல் அமைப்பின் பொருட்கோடலுக்கு அமைய உயர்நீதின்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment