Banner 468 x 60px

 

Wednesday, January 9, 2013

கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள 'PaperTab' !

0 comments



கணனியுலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பொன்று லாஸ் வெகாஸில் நடைபெற்றுவரும் இவ்வருடத்திற்கான நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

'The PaperTab' என்று பெயரிடப்பட்டுள்ள இது கணனிகளின் வரைவிலக்கணத்தையே மாற்றியமைக்குமென தொழிநுட்ப நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
தற்போது சந்தையில் கிடைக்கின்ற டெப்லட்கள் போலன்றி மடியக்கூடிய, மிக மெல்லிய, கீழே விழுந்தாலும் பாதிப்படையாத திரையாக இது உள்ளது.
இத்திரையானது 10.7 அங்குலமானது என்பதுடன் அது துள்ளியமானது. இதன் சில செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு பாவனையாளர் அதனை சற்று வளைத்தால் போதுமானது.
மேலும் Intel® CoreTM i5 புரசசரின் மூலம் இது இயங்குகின்றது.
இதன் செயற்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது உதாரணமாக ஒரி மின்னஞ்சல்கள் கணக்கை எடுத்துக்கொன்றால் அதன் Inbox, Outbox, மற்றும் Compose Mail ஆகிய பிரிவுகள் திரையில் ஒன்றாகத் தோன்றாமல் வெவ்வேறு திரையில் பகுதி பகுதியாகத் தோன்றும்.

எனவே பல பேப்பர் டெப்களை கணனி போன்று செயற்படுத்த முடியும். 
இண்டெல் மற்றும் பிரித்தானிய பிலாஸ்ரிக் நிறுவனமான பிலாஸ்ர்க் லொஜிக் ஆகியன இணைந்து கனேடிய குயின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்தே இதனைத் உருவாக்கியுள்ளன.
இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து இதனை அறிமுகப்படுத்திய நிறுவனம் அறிவிக்கவில்லை.

0 comments:

Post a Comment