Banner 468 x 60px

 

Wednesday, January 30, 2013

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா

0 comments



ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரவிருக்கின்றது.

மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பேரவையின் கூட்டத்தொடரின் போதே இந்த தீர்மானத்தை கொண்டுவரவிருப்பதாக பிரதி உதவிச்செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஊக்குவிக்கும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பிலே 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானத்தை' கொண்டுவரவிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற் மனித உரிமைக்கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டநிலையில் ஒருவருடத்திற்குள் மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருகின்றது.

பரிந்துரைகளை மந்தக்கதியில் அமுலாக்குவது தொடர்பிலேயே  நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கின்றது.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குற்றப்பிரேரணை மற்றும் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானங்கள் மற்றும் அறிவிப்புக்களை அமுல்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கரிசனை காட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment