பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை விட செயற்திறன் மிக்க மூலிகை மாத்திரயொன்றை தென்கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய சியோல் நகரிலுள்ள யொன்ஸெயி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஜின்செங் என்ற மூலிகை வேரில் தயாரிக்கப்பட்ட இந்த மாத்திரையை ஒரு சில
வாரங்களுக்கு உள்ளெடுத்த பின் இயல்பாகவே பாலியல் ரீதியில் ஊக்கசக்தி
அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள 119 ஆண்களிடம் இந்த மாத்திரையை பரிசோதித்துள்ளனர். இதன்போது அவை வெற்றியளித்துள்ளன.

ஜின்செங் பாலியல் குறைப்பாட்டுக்கு சிறந்ததென இதற்கு முன்னரும் பல
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். எலிகளிடம் நடத்திய சோதனைகளின் போது
அவை வெற்றியளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
பாலியல் ஊக்க மாத்திரகளான வயாகரா,சியாலிஸ், லெவிட்ரா ஆகியன 30 % ஆண்களுக்கு பலனளிப்பதில்லை என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஜின்செங் வேர்கள் பல்லாண்டு காலமாக உடல் ஆரோக்கியத்துக்கு
சிறந்ததென நம்பப்பட்டு வருவதுடன் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட
மருந்துகளும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சீன மருத்துவத்தில் ஜின்செங் வேர்கள் பரவலாக
உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. பாலியல் ஊக்கியாக சீன மருத்துவத்தில் இவை
பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment