Banner 468 x 60px

 

Thursday, January 17, 2013

பேஸ்புக்கினூடாக இலவச அழைப்புக்கள்!

0 comments
 
By HSM IHTHISHAM
2013-01-17 13:53:05

அப்ளிகேசன் ஊடாக இலவச அழைப்பினை மேற்கொள்ளும் வசதியினை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதியானது தற்போது ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அண்ட்ரோய்ட், பிளக்பெரி போன்ற முன்னணி இயங்குதளக்கு இச்சேவை வழங்கப்படவில்லை.
பேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்ளிகேசன் ஊடான இக் கோலிங் வசதியை தொலைபேசி வலையமைப்பினூடாகவோ அல்லது வை-பை மூலமாகவோ உபயோகிக்க முடியும்.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் மற்றைய நாடுகளுக்கும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இவ்வசதியை இம்மாத ஆரம்பத்திலிருந்து பேஸ்புக் கனடாவில் பரிசோதித்துள்ளது.
நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்விலேயே பேஸ்புக் இதனை அறிமுகப்படுத்தியது.
இதே நிகழ்விலேயே ' "Graph Search' எனப்படும் பேஸ்புக்கினுள் தேடலை இலகுபடுத்தும் வசதியொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தது. 

பேஸ்புக்கில் உள்ள பிரம்மாண்டமான தரவுத் தொகுப்பில் இருந்து பாவனையாளர்களுக்கு தேவையானதை இலகுவாக தேடி வழங்குதலே இதன் நோக்கம் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நபர்கள், இடங்கள், ஆர்வங்கள், படங்கள் ஆகியவற்றை இதனூடாக தேடிக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment