வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் லெப்டொஸ் புரொசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் வைத்திய ஆலோசனைக்கு அமைய, செயற்பட வேண்டுமென அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரத்திற்குள் பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 10 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
கடந்த வருடத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இரண்டாயிரத்து 600 நோயாளர்கள் பதிவானதோடு அவர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் காய்ச்சல், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், கடும் தலைவலி, தசைநோ மற்றும் வாந்தி போன்றவை எலிக்காய்ச்சலுக்கான பிரதான நோய் அறிகுறிகள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
0 comments:
Post a Comment