இஸ்ரேலில் யூதர்களின் சனத்தொகை புதிய மைல்கல்லொன்றினை எட்டியுள்ளது.
அந்நாட்டு புள்ளிவிபரங்களின் படி இஸ்ரேல் வசிக்கும் யூதர்களின் எண்ணிக்கை 6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதுவொரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றது.
இவ் எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியில் ஐரோப்பிய யூதர்கள் ஹிட்லர் தலைமையில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கைக்குச் சமமானதென சுட்டிக்காட்டப்படுகின்றது.
இஸ்ரேலின் மொத்த சனத்தொகையான 7.89 மில்லியனில் 75.4 வீதமானோர் யூதர்கள் என்பதுடன் 20 வீதமானோர் அரேபியர்கள் எனவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும் உலகளாவிய ரீதியில் யூதர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
யூதப்படுகொலையின் முன்னர் உலகளாவிய ரீதியில் யூதர்களின் எண்ணிக்கை 18 மில்லியனாக இருந்தது.
படுகொலைகளுக்கு பின்னர் அவ் எண்ணிக்கை 13 மில்லியனுக்கு சற்று அதிகமாக இருந்தது.
தற்போதும் அவ் எண்ணிக்கை 13 மில்லியனாகவே உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
0 comments:
Post a Comment