புற்றுநோய்க்காக சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் புதிய உபாதைக்கு உள்ளாகி இருப்பதாக அவரது துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சாவெஸ் இன்னும் மோசமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் சாவெஸ் கடந்த மூன்று வாரங்களாக மக்கள் முன் தோன்றவில்லை. அத்துடன் அவரது உடல் நிலை குறித்து தொடர்ந்து ரகசியங்களே வலுத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சாவெஸ் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு நடக்கவுள்ள ஜனவரி 10ம் திகதி என்ன நடக்கும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மறுபுறத்தில் பதவியேற்பு நிகழ்வை ஒத்திவைப்பது சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர். மாறாக பதவியேற்பில் ஜனாதிபதி பங்கேற்காவிட்டால் 30 தினங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே தமது உடல் நிலை மோசமடைந்தால் வெனிசுவேலா மக்கள் துணை ஜனாதிபதி மடுரொவுக்கு வாக்களிக்குமாறு சாவெஸ் கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment