புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவது கூகுளுக்கு புதிதல்ல. கடந்த
சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகர கண்ணாடி இதற்கு
சிறந்த உதாரணமாகும்.
இதேவேளை புதிய ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்டை கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூகுளின் 'X' எனப்படும் இரகசிய ஆய்வகத்திலேயே இதுவும் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இவை மடங்கக்கூடிய திரையைக் கொண்டிருப்பதுடன் , பளிங்கினால் ஆன வெளிப்புறத்தையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர அசைவுகளை அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
கூகுள் மோட்டோரொல்லா நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ளமையால்
அந்நிறுவனத்தின் பெயரிலேயே இதனை அறிமுகப்படுத்தலாம் என
எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் செம்சுங், எல்.ஜி. நிறுவனங்களுடன் இணைந்து நெக்சஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை கூகுள் வெளியிட்டிருந்தது.
இதேவேளை மொஸிலா நிறுவனமானது பயர்பொக்ஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஒன்றின் பெயர் Keon , மற்றொன்றின் பெயர் Peak.. டெவலப்பர்களுக்காகவே தற்போது மொஸிலா இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெவலப்பர்கள் இவ் இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை உருவாக்கும் பொருட்டே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதியின் பின்னர் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இவை விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மொஸிலாவானது ஸ்பெய்ன் நாட்டு நிறுவனங்களான கீக்ஸ் போன் மற்றும்
டெலிபோனிகா ஆகியவற்றுடன் இணைந்தே இச் ஸ்மார்ட் போன்களை தயாரித்துள்ளது.
0 comments:
Post a Comment